தூத்துக்குடியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 153 வது பிறந்தநாள் விழா- முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தூத்துக்குடி கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 153 வது பிறந்தநாள் விழா செப்டம்பர் 5 ம் தேதியான இன்று நாடு முழுவதும் கொட்டப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்பி சண்முகநாதன் தலைமையில் பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள வ உ சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் தொடர்ந்து தமிழ்நாடு வ உ சி பேரவை மாநில இளைஞர் அணி செயலாளர் 39 வது வார்டு வட்டச் செயலாளரும் ஜெ.பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம் எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் டைகர் சிவா ஏற்பாட்டில் 50 நபர்களுக்கு வேட்டி சேலை ஆகிய நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளருமான இரா சுதாகர், பகுதி கழகச் செயலாளர்கள் முன்னாள் துணை மேயர் சேவியர், முருகன் ஜெய்கணேஷ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ் மாவட்ட இளைஞர் மற்றும் ,மாவட்ட வக்கீல் அணி இணைச் செயலாளர் முனியசாமி மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் மனுவேல் ராஜ், மாவட்ட அண்ணா ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், வட்டக் கழக செயலாளர் சொக்கலிங்கம், மற்றும் பால ஜெயம், சாம்ராஜ், சகாயராஜா உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.