தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி நடப்பாண்டில் இலக்கை கடந்து கூடுதலாக 35 சதவீதம் கடன்களை வழங்கும் - வங்கியின் நிர்வாக இயக்குனர் சலி எஸ் நாயர் தகவல்.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி நடப்பாண்டில் இலக்கை கடந்து கூடுதலாக 35 சதவீதம் கடன்களை வழங்கும் - வங்கியின் நிர்வாக இயக்குனர் சலி எஸ் நாயர் தகவல்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பாக தூத்துக்குடியில் வங்கியின் செயல்பாடுகள் குறித்து நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலி எஸ் நாயர் செய்தியாளர்களுக்கு சந்தித்தார் 

 அப்போது அவர் பேசுகையில் வங்கி இந்த ஆண்டு இதுவரை 91 ஆயிரத்து 875 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்து 303 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 11 சதவீதம் அதிகம், வங்கியின் வைப்புத்தொகை 49ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டு 40 புதிய கிளைகளை தொடங்க திட்டமிடப்பட்டத்தில் இதுவரை 15 கிளைகளை துவக்கி உள்ளோம் என்றார்.

உடன் வங்கியின் செயல் இயக்குனர் வின்சென்ட் மெனச்சரி தேவ்வசாய், மூத்த நிதி ஆலோசகர் கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.