தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில் ரூ.16 லட்சம் நிதியுதவி: மாநகராட்சி பள்ளி கட்டிடத்திற்ககாக வழங்கல்!
தூத்துக்குடியில் மாநகராட்சி பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில் ரூ.16 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சமூக பொறுப்பு நிதி திட்டத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி பெரிய காட்டன் ரோட்டில் உள்ள சி.வ. தொடக்கப் பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.16லட்சம் நிதியினை மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமாரிடம், வங்கியின் தலைமை அலுவலக திட்டமிடல் துறை துணை பொது மேலாளர் அசோக்குமார், மண்டல மேலாளர் சுந்தரேஷ்குமார் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்வில் வங்கியின் உதவி பொது மேலாளர் சரவண பெருமாள், தலைமை மேலாளர் தினேஷ்குமார், தெற்கு கிளை மேலாளர் கண்ணன் மற்றும் வங்கியின் அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.