தமிழ்நாடு முதல்வர் மு.க .ஸ்டாலின் பிறந்தநாள் விழா; 5000 மரக்கன்றுகள் நடபடும் மேயர் ஜெகன் அசத்தல் திட்டம்.

தமிழ்நாடு முதல்வர் மு.க .ஸ்டாலின் பிறந்தநாள் விழா; 5000 மரக்கன்றுகள் நடபடும் மேயர் ஜெகன் அசத்தல் திட்டம்.

தமிழ்நாடு முதல்வர் திமுக  தலைவருமான மு.க. ஸ்டாலின் 75 பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் 5000 மரங்கள் நடப்படும் மேயர் பெரியசாமி அசத்தலான திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆல் கேன் டிரஸ்ட் தலைவர்  மோகன்தாஸ் சாமுவேல் முன்னிலையில் மரக்கன்றுகள் நடும் தொடக்கவிழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதல் மரக்கன்றை மேயர் திமுக செயற்குழு உறுப்பினருமான ஜெகன் பெரியசாமி நட்டு துவக்கிவைத்தார் மரங்களின் பாதுகாப்புக்கு வைக்கப்படும் வலைகளில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்லாண்டு காலம் வாழ்க என்று வாழ்த்து போஸ்டரும் ஒட்டப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கீதா முருகேசன், தொழிலதிபர் மோகன், திமுக பிரமுகர் பிரபாகர், மகேஸ்வர சிங், ஆல் கேன் டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.