தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் 38 பயனாளிகளுக்கு வீடு கட்ட எம்எல்ஏ சண்முகையா ஆணையை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் 38 பயனாளிகளுக்கு வீடு கட்ட எம்எல்ஏ சண்முகையா ஆணையை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின் கடந்த சட்டபேரவை கூட்டத் தொடரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி இன்றைய தினம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் முதற்கட்டமாக ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 38 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான ஆணைகளையும் பழுதடைந்த வீடுகளை பழுது நீக்கம் செய்வதற்கு 108 பயனாளிகளுக்கு ஆனைகளையும் கடந்த வருடம் பெய்த கனமழையால் வீடுகளை இழந்த 40 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளையும் பயனாளிகளுக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் யூனியன் ஆணையாளர் வசந்தா வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரா பணி மேற்பார்வையாளர்கள் சங்கர் பரமசிவன் பாலசுப்பிரமணியன் நகர செயலாளர் பச்சை பெருமாள் மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுடலைமணி அய்யாத்துரை கிருஷ்ணவேணி கணேசன் வேல்கனி பெருமாள் பாஞ்சாலங்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லதா கருணாநிதி கிளை செயலாளர்கள் கோமதி பாலமுருகன் தங்கபாண்டியன் தெற்கு ஆவாரங்காடு கிருஷ்ணசாமி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஊராட்சி செயலர்கள் பயனாளிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.