தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா; மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி தலைமையில் கொண்டாட்டம்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் 3 வது வார்டு ஹவுசிங் போர்டு காலனி பூங்கா முன்பு 3 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழகம் முழுவதும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் தூத்துக்குடியில் 3 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி கணக்கு குழு தலைவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான ரெங்கசாமி தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தொமுச சேவியர்,ராஜன்,பால்ராஜ் செல்வராஜ்,பிஎஸ்என்எல் ராஜாமணி,சிவசுப்பிரமணியன், பொன்னுச்சாமி,இளைஞர் அணி செல்லையா,சதீஷ்குமார்,வடிவேலு, காளியப்பன்,வேல்முருகன்,மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.