தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு விரைவில் நோட்டீஸ்-எம்பி கனிமொழி கருணாநிதி.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு விரைவில் நோட்டீஸ்-எம்பி கனிமொழி கருணாநிதி.

தூத்துக்குடியில் நான்காவது புத்தக கண்காட்சி நடைபெறுவதை முன்னிட்டு  புத்தக கண்காட்சி குறித்த விழிப்புணர்வு பலூனை பறக்க விட்டு புத்த கண்காட்சி நடைபெற இருக்கும் இடத்தில் நடைபெறும் பணிகளை கனிமொழி எம்பி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் நான்காவது புத்தக கண்காட்சி 21/04/23 அன்று தொடங்கி மே 1ம் தேதி வரை நடைபெற உள்ளது தூத்துக்குடி சங்கர பேரி பிரதான சாலை அருகே நடைபெறும் இந்த புத்தக கண்காட்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ராட்ச பலூன் பறக்க விடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற திமுக குழு துணை தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி கலந்துகொண்டு ராட்ச பலூன் பறக்க விட்டார் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள புத்தக கண்காட்சிக்கான அரங்குகளை பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து கனிமொழி எம்பி  செய்தியாளரிடம் பேசிய போது பத்து நாட்கள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் 110 அரங்குகளில் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது மேலும் சிவகளை கொற்கை உள்ளிட்ட பகுதியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி குறித்தும் தொல்லியல் பொருட்களின் கண்காட்சி நடைபெற உள்ளது இதுபோல் புகைப்பட கண்காட்சியும் நடைபெற உள்ளது கடைசி நான்கு நாட்கள் பாரம்பரிய கலைகளை பறைசாற்றும் வகையில்  நெய்தல் கலை விழாவும் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

மேலும் நிச்சயமாக நீதி மன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  பதில் சொல்ல வேண்டும்.விரைவில் அண்ணாமலைக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்புவேன் என தெரிவித்தார்

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் தூத்துக்குடி மாநகராட்சி மண்டல தலைவர் பால குருசாமி உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.