கனிமொழி எம்பியை ஆதரித்து மேயர் ஜெகன் பெரியசாமி மீனவ மக்களுக்கு அரசு செய்த சாதனைகளை சொல்லி மீனவ பகுதி பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கனிமொழி எம்பியை ஆதரித்து மேயர் ஜெகன் பெரியசாமி மீனவ மக்களுக்கு அரசு செய்த சாதனைகளை சொல்லி மீனவ பகுதி பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மீன் பிடித்தடைக்கால நிவாரணத் தொகையை உயர்த்தியது முதல் மீனவ சமுதாய மாணவர்களுக்கான திட்டங்கள் வரை மீனவ மக்களுக்கு திமுக அரசு செய்த சாதனைகளை சொல்லி, கனிமொழி எம்பியை ஆதரித்து மேயர் ஜெகன் பெரியசாமி மீனவ பகுதி பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி எம்பிக்கு ஆதரவாக தூத்துக்குடி மாநகருக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், தேர்தல் பணிகள் தொடங்கிய நாட்களில் இருந்து வீதி வீதியாக நடந்து சென்று வியாபாரிகள், இளைஞர்கள், மீனவர்கள் என அனைத்து தரப்பு பொதுமக்களிடமும் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு மேயர் ஜெகன் பெரியசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, 

தூத்துக்குடி ரோச் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.