கோடை காலம் ஆரம்பம்- தூத்துக்குடி மாநகர மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்!.
தூத்துக்குடி மாநகராட்சி உட்பட மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் வல்லநாடு நீரேற்று நிலையத்தை மேயர் ஜெகன் பெரியசாமி நேற்றைய தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால் ஆற்றில் வரும் நீர்மட்டமும் மிகவும் குறைந்து வருகிறது.
எனவே பொதுமக்களுக்கு வழங்கப்படும் நீரின் அளவையும் தொடர்ந்து கண்கானிக்குமாறும், நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைந்துள்ள பகுதிகளைச் சுற்றி உள்ள அமலைச் செடிகள் மற்றும் கிணற்றுக்குள் நீர் வருவதற்கு தடையாக இருக்கும் மணல் திட்டுகளை அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் ஆற்றில் வரும் நீரின் அளவானது குறைவாக இருக்கும் போதும் மாநகர மக்கள் தற்பொழுது வரை தடையில்லாமல் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே ஆற்றில் வரும் நீரின் அளவை கருத்தில் கொண்டும் கோடை காலம் ஆரம்பமாகி இருப்பதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மேயர் ஜெகன் பெரியசாமி மாநகர மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி உதவி பொறியாளர் சரவணன், உதவியாளர்கள் பிரபாகர், பேச்சிமுத்து, ராமர் உட்பட பலர் உடன் இருந்தனர்.