மும்மொழி கொள்கை படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் - நயினார் நாகேந்திரன் நச் பதில்!.

மும்மொழி கொள்கை படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் - நயினார் நாகேந்திரன் நச் பதில்!.

இந்தி படிக்கக் கூடாது என்று சொல்லும் திமுக தலைவர்கள், பொறுப்பாளர்கள் நடத்தக்கூடிய பள்ளியில் இந்தி பாடமாக வைத்துள்ளார்கள்., படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவிலா? தூத்துக்குடியில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் 

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பட்ஜெட் விளக்க கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநிலத் துணைத் தலைவரும், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் மற்றும் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு தூத்துக்குடி தொழிலதிபர்களுக்கு பட்ஜெட் பற்றிய விளக்கத்தை எடுத்துரைத்தனர்.

தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் நிதியை இவர்கள் கேட்கின்றார்களா? புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பவர்கள் அந்தத் திட்டத்தின் நிதியை ஏன் கேட்கின்றார்கள்?

தமிழ்நாட்டில் தற்போது பாலியல் பிரச்னைகள் பெரிய பிரச்னையாக உள்ளது. சிறு குழந்தைகள், மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். தமிழக அரசு போதைப்பொருள் கஞ்சா, அபின் போன்ற போதை பொருள்களை உடனடியாக தடை செய்ய வேண்டும். காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது எங்க போய் முடியும் என தெரியவில்லை.

இந்தி படிக்கக் கூடாது என கூறும் திமுகவினர்கள் அவர்கள் நடத்தக்கூடிய பள்ளியில் இந்தி பாடமாக வைத்துள்ளார்கள். படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் போல் உள்ளது என்றார்.