தூத்துக்குடியில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் பேச்சு போட்டி - அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்தும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சு போட்டியானது வெள்ளிக்கிழமை (21.02.2025) இன்று காலை 10 மணியளவில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் சே.ச, துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ், மாநில ஒருங்கிணைப்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜே. ஹாஜாகனி, மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பொறுப்பு பெனட் ஆசிர் வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சு போட்டியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
சிறுபான்மையினர் ஆணையம் மாநில ஒருங்கிணைப்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேச்சு போட்டியில் திரளாக கலந்து கொண்ட மாணவ மாணவிகள் இடையே வாழ்த்துரை நிகழ்த்தினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார். இறுதியில் நாட்டுப்பண் பாடலுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
நிகழ்ச்சியில் காமராஜர் கல்லூரி முதல்வர் பூங்கொடி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில் குமார் ஜுவன் ஜேகப், மற்றும் கட்சி நிர்வாகிகள் மாணவ மாணவிகள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.