மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் மறு வரை தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கும் - அமைச்சர் கீதா ஜீவன்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில்;
ஒன்றிய அரசின் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறு வரை செய்யும் பொழுது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிப்படையும் தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதிப்படையும் என்பதை நமது முதல்வர் மு க ஸ்டாலின் உணர்ந்து முதல் எதிர்ப்பு பதிவை ஒன்றிய அரசுக்கு தெரிவித்தார்.
நமது முதலமைச்சரின் இந்த குரலுக்கு தென் மாநில தலைவர்கள் ஆதரவாக பேசி வருவது அனைவருக்கும் தெரியும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை மிகத் தீவிரமாக செயல்படுத்தி நாம் இருவர் நமக்கு மூவர் என்றிலிருந்து நாம் இருவர் நமக்கு இருவர் என குறைத்து நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற அளவிலேயே அரசு திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி அதன் மூலம் வளர்ச்சிப் பணிகள் எல்லோருக்கும் கல்வி என்ற விதத்தில் அரசு செயல்படுத்தி வருகிறது.
தென் மாநிலத்தில் உள்ள கேரளா மாநிலத்தில் பிறப்பு விகிதம் குறைவாகத்தான் உள்ளது இந்த மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறு வரை செய்யப்பட்டால் கேரளாவில் எட்டு தொகுதிகள் வரை குறைய வாய்ப்புள்ளது இதில் தமிழ்நாடு மிகவும் பாதிப்படைய வாய்ப்புள்ளது.
இந்த ஆபத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்கூட்டியே நமக்கு உணர்த்தி உள்ளார்கள். கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிதி பகிர்வு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு, நீட்டாக இருந்தாலும் சரி, புதிய கல்விக் கொள்கையாக பின்பற்றாமல் இருப்பதால் அதற்கான நிதி வழங்காமல் தொடர்ந்து ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. 1 ரூபாய் ஜி எஸ் டி செலுத்தும் தொகைக்கு தமிழகத்திற்கு 29 பைசாக்கள் மட்டுமே வழங்குகிறது அதேபோல் உத்தரப்பிரதேசத்திற்கு இரண்டரை ரூபாயும் பீகாரருக்கு ஏழு ரூபாயும் வழங்குகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் மகளிர் இட ஒதுக்கீட்டில் விவாதத்தின் போதும் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் மறு வரை செய்யப்பட்ட பின்பு இந்த திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று சொன்னார்கள் இந்த முறையும் அதே பதிலை உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். இது நமக்கு பேராபத்தை விளைவிக்கும் அரசின் திட்டங்களை அரசின் கொள்கைகளை முறையாக பின்பற்றி வளர்ச்சி திட்டங்களை நோக்கி வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது தமிழகம் தென் மாநிலத்தின் பிரதிநிதித்துவதுவம் குறைந்து விடக்கூடாது நமது பிரதிநிதித்துவத்தின் குரல் நாடாளுமன்றத்தில் குறைந்து விடக்கூடாது.
தற்போது மக்கள் 23.74 சதவீதமாக உள்ள தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவம் மக்கள் தொகை அடிப்படையில் மறு வரை செய்தால் 18 புள்ளி 97 சதவீதமாக குறையும் என தேர்தல் ஆணையம் தனது புள்ளி விவரத்தில் தெரிவித்து இருக்கிறது தெலுங்கானாவில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி மக்கள் தொகை அடிப்படையில் மறு வரை செய்யும் பட்சத்தில் 100 தென்னிந்திய தொகுதிகள் குறையும் என்றும் பேசியுள்ளார் எனவே இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு தென்னிந்திய மாநிலத்தின் வளர்ச்சிக்கும் பிரதிநிதித்துவத்திற்கும் பேராபத்தாக முடியும் என்பதை கருத்தில் கொண்டு நம் முதல்வர் மு க ஸ்டாலின் முன்னெடுப்பில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒன்றிய அரசின் மக்கள் தொகை அடிப்படையில் மறு வரை செய்யப்படும் நாடாளுமன்ற தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது பற்றி பொதுமக்களுக்கு உணர்த்தும் விதமாக பொதுக்கூட்டங்கள் நடத்தியும் திண்ணைப் பிரச்சாரம் செய்தும் துண்டு பிரச்சாரம் வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார் .