செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வீட்டில் நடந்த சோகம் அதிர்ச்சியில் உடன்பிறப்புக்கள்.....
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தந்தை முத்தூர் சா.பெருமாள்சாமி கவுண்டர் உடல்நலக் குறைவினால் இன்று இயற்கை எய்தினார்.
தற்போது 94 வயதாகும் பெருமாள் சாமி கவுண்டர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
அமைச்சர் சாமிநாதனின் தந்தை மறைவுக்கு திமுக தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அமைச்சரின் தந்தை மறைவு திமுகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.