வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லாததை கண்டித்து சண்முகையா எம்எல்ஏ தலைமையில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லாதவை கண்டித்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமையில் செப்டம்பர் மாதம் 6 தேதி வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு சுற்றியுள்ள சுமார் 70 கிராமங்களைச் சார்ந்த வியாபாரிகள் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏதுவாக இருந்த ரயில்கள் அனைத்தும் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் நின்று செல்வதை தென்னக ரயில்வே நிறுத்திவிட்டது.
இதனால் சுமார் 75 கிராமங்களை சார்ந்த அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர் கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்னர் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் நின்று சென்ற ரயில்கள் அனைத்தும் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏதுவாக நின்று செல்ல வழிவகை செய்யுமாறு பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த ரயில்களும் நிற்கவில்லை.
இந்நிலையில் நேற்றைய தினம் 19/08/24 ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா சென்னையில் _ரயில்வே தென்மண்டல உதவி மேலாளர் கௌசில் கிஷோர் நேரில் சந்தித்து
1. 19-08-2024 அன்று ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்ட திருநெல்வேலி - தூத்துக்குடி (06668-06667) திருநெல்வேலி பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்பட்டதை மீண்டும் இயக்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
2. வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் கொரோனா ஊரடங்கு களத்திற்கு முன்னர் நின்று சென்ற ரயில்கள் அனைத்தும் மீண்டும் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும் கோரிக்கை மனுவினை வழங்கினார்.
அனைத்து ரயில்களும் நின்று செல்லாவிட்டால் 06-09-2024 அன்று காலை 10 மணி அளவில் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாதலைமையில் சுமார் 75 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.