செக்காரக்குடி கிராமத்தில் ரூ 9.36 லட்சம் மதிப்பில் 63 KVA உற்பத்தி திறன் கொண்ட புதிய மின்மாற்றி - சண்முகையா எம்எல்ஏ மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.

செக்காரக்குடி கிராமத்தில் ரூ 9.36 லட்சம் மதிப்பில் 63 KVA உற்பத்தி திறன் கொண்ட புதிய மின்மாற்றி - சண்முகையா எம்எல்ஏ மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கீழ செக்காரக்குடி கிராமத்தில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

சட்டமன்ற உறுப்பினர் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் மூலம் 9.36 லட்சம் மதிப்பில் 93 மின் நுகர்வோர் பயன்பெறும் வகையில் 63 KVA உற்பத்தி திறன் கொண்ட புதிய மின்மாற்றியை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா இயக்கி வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருவைகுண்டம் வட்டாட்சியர் ரத்னாசங்கர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுடலைமுத்து உதவி மின்பொறியாளர் சண்முகத்தாய் கருங்குளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ் காந்தி கருங்குளம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி மாவட்ட பிரதிநிதி கருப்பசாமி ஊராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி அய்யம்பெருமாள் செக்காரக்குடி ஐஸ் மாரியப்பன் கிளை செயலாளர்கள் சேகர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.