கனமழை வெள்ளத்தால் கரை உடைந்து ராசாங்குளத்தின் கரை சீரமைக்கும் பணி - சண்முகையா எம்எல்ஏ யூனியன் சேர்மன் ரமேஷ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டப்பிடாரம் ராசாங்குளத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழை வெள்ளத்தால் கரை உடைந்து மிகுந்த பாதிப்பை உண்டாக்கியது.கரையை சீரமைத்து தர பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி இன்று 4.81 லட்சம் மதிப்பீட்டில் ராசாங்குளத்தின் கரையை சீரமைத்து பலப்படுத்தும் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ஆனந்த் யூனியன் ஆணையாளர் வசந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி உதவி பொறியாளர் ஜெயபால் வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் ஒன்றிய கவுன்சிலர் சித்ராதேவி சன்முகராஜ் முப்பிலிவெட்டி பால் பண்ணை தலைவர் முத்துவேல் ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் கோபால் இளைஞரணி கார்த்திக் விக்கி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.