ஒட்டப்பிடாரம் சில்லாநத்தம் நயினார்புரத்தில் 16 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி - சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் சில்லாநத்தம் ஊராட்சி நயினார்புரம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 16 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன் ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன் ஒன்றிய துணை கழகச் செயலாளர் சிவன் மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் தங்கவேல்சாமி மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் மாடசாமி வர்த்தக அணி முத்துக்குமார் நெசவாளர் அணி ஈசன் சுரேஷ் சிறுபான்மை அணி ஞானதுரை மாணவரணி தங்கதுரை பாண்டியன் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் நல்லமுத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் சரஸ்வதி திலிப் அருண்குமார் ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன் இளைஞரணி ஜெகன் பார்த்திபன் நயினார்புரம் சுப்புராஜ் புதியம்புத்தூர் கிளை செயலாளர் பூவலிங்கம் நடுவக்குறிச்சி கிளை செயலாளர் பாலமுருகன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.