சாமிநத்தம் கிராமத்தில் 5.89 லட்சம் மதிப்பீட்டில் 63 KAV உற்பத்தித்திறன் கொண்ட புதிய மின்மாற்றி - மக்கள் பயன்பாட்டிற்கு சண்முகையா எம்எல்ஏ இயக்கி வைத்தார்.

சாமிநத்தம் கிராமத்தில் 5.89 லட்சம் மதிப்பீட்டில் 63 KAV உற்பத்தித்திறன் கொண்ட புதிய மின்மாற்றி - மக்கள் பயன்பாட்டிற்கு சண்முகையா எம்எல்ஏ இயக்கி வைத்தார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் சாமிநத்தம் கிராமத்தில் 5.89 லட்சம் மதிப்பீட்டில் 63 KAV உற்பத்தித்திறன் கொண்ட புதிய மின்மாற்றி குறைந்த மின்னழுத்தம் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக பொது மக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்ததையடுத்து தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் மூலம் சுமார் 82 நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் 5.89 லட்சம் மதிப்பீட்டில் 63 KAV உற்பத்தித்திறன் கொண்ட புதிய மின்மாற்றியை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் உதவி பொறியாளர் சண்முகத்தாய் தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி ஒன்றிய துணைச் செயலாளர் சிவன் மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி ஒன்றிய வர்த்தக அணி துணை அமைப்பாளர் காளியப்பன் ஊராட்சி மன்ற தலைவர்கள் மகாலட்சுமி நல்லதம்பி அருண்குமார் நடுவக்குறிச்சி கிளை செயலாளர் பாலமுருகன் ராஜாவின் கோவில் கிளை செயலாளர் சிவமுருகன் ஊராட்சி செயலர் அருண் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.