திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று கூறிய கனிமொழிக்கு சண்முகநாதன் கேள்வி.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று கூறிய கனிமொழிக்கு சண்முகநாதன் கேள்வி.

தமிழ்நாட்டில் மது  அருந்துவதினால் விதவைகள் அதிகமாக உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று கூறிய கனிமொழி இப்போது ஆட்சிக்கு வந்தவுடன் நான் அப்படி சொல்லவே  இல்லை என்கிறார் இது தான் விடியா திமுக அரசு - முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் கேள்வி.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மொழிப்போர்  தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ் ஏற்பாட்டில்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள்அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமையில்தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் நடைபெற்றது.

இதில் கலந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் பேசுகையில்.

தமிழ்நாட்டில் மது  அருந்துவதினால் விதவைகள் அதிகமாக உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று கூறிய கனிமொழி இப்போது ஆட்சிக்கு வந்தவுடன் நான் அப்படி சொல்லவே  இல்லை என்கிறார் . ஆட்சிக்கு வருவதற்கு முன் பேச்சு ஆட்சியில் வாந்த பின்பு ஒரு பேச்சு இதுதான் திமுக அரசு.

திமுக அரசுஆட்சிக்கு வருவதற்கு முன்  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எந்தவித வரியை  உயர்த்த மாட்டோம் என்றனர் ஆனால் இன்று மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என அனைத்தையும் உயர்த்தி உள்ளது இதுதான்  திமுக அரசின் 20 மாத கால சாதனை என்ற அவர் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில்  அறிவித்த எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை மக்கள்   திமுக அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். 

எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக  அமோக வெற்றி பெறும் ஒரே நாடு ஒரே தேர்தல் இதன்படி வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்லோடு சேர்த்து சட்டமன்ற தேர்தலும்  வர இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்.எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும் அதுவரை நாம் அனைவரும் இரவு,பகல் பாராமல் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.