வெள்ள நீரை வெளியேற்றும் பணி - இரவு பகலாக பணியாற்றி வரும் சண்முகையா எம்எல்ஏ.

வெள்ள நீரை வெளியேற்றும் பணி - இரவு பகலாக பணியாற்றி வரும் சண்முகையா எம்எல்ஏ.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது வெள்ளநீர் தேங்கிய பகுதிகளில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா இரவு பகலாக வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி இன்றுஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி  கோரம்பள்ளம் ஊராட்சி பெரியநாயகிபுரம் ஆபிரகாம் நகரில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ள பகுதியில் வேட்டியை மடித்துக் கொண்டு வெள்ள நீரில் இறங்கி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா பார்வையிட்டார்.

தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் இருந்து மழைநீரை அகற்றும் பணிகளை மீன்வளக் கல்லூரி அருகே உள்ள ஓடையில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 மேலும் வெள்ள நீர் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.  

இந்த ஆய்வின் போது வட்டாட்சியர் முரளிதரன் மீன்வள கல்லூரி முதல்வர் நீதிசெல்வன் தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநர் சிவம்ஷர்மா வட்டார வளர்ச்சி அலுவலர் ஹைகோர்ட் ராஜா உதவி பொறியாளர் ரவி கிராம நிர்வாக அலுவலர்கள் மீளவிட்டான் நட்டார் செல்வம் அய்யனடைப்பு சுரேஷ் ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்கொடி இளைஞரணி நாராயணன் வழக்கறிஞரணி மகேந்திரன் தகவல் தொழில்நுட்ப அணி மணிகண்டன் விவசாய அணி கோபால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.