பெரியநத்தம் கண்மாயில் பொதுப்பணித்துறை மூலம் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெரும் பணிகளை சண்முகையா எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரியநத்தம் கண்மாயில்  பொதுப்பணித்துறை மூலம்  ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெரும் பணிகளை சண்முகையா எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் பெரியநத்தம் கண்மாயில் பொதுப்பணித்துறை மூலம் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் அலைக்கற்கள் பதிக்கும் பணி, புதிதாக மதகு அமைக்கும் பணி மற்றும் கரையில் உள்ள கருவேல மரங்களை அகற்றி கரையை பலப்படுத்தும் பணிகளை பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளின் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து தெற்கு சிந்தலக்கட்டை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அரசினுடைய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து கிராமங்களுக்கு தேவையான திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் செல்வலட்சுமி கிராம நிர்வாக அலுவலர் கீதா நீர்வளத்துறை தொழில்நுட்ப உதவியாளர் பிரபாகரன் கிளை செயலாளர்கள் ஜேக்கப் மைக்கேல் ராஜ் புஷ்பராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்