அக்காநாயக்கன்பட்டி புதுக்குளத்தில் புதிதாக கட்டப்பட்ட தடுப்புச்சுவர் சீரமைக்கப்பட்ட கரைகளை சண்முகையா எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் அக்காநாயக்கன்பட்டி புதுக்குளத்தில் 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்புச்சுவர் மற்றும் சீரமைக்கப்பட்ட கரை உடைப்புகள் மற்றும் கரைகளின் தன்மை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் கிராம நிர்வாக அலுவலர் நாராயணன் ஊராட்சி மன்ற தலைவர்கள் அய்யாத்துரை அருண்குமார் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கணேசன் ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் ராமலட்சுமி கிளை செயலாளர்கள் இளையராஜா இளங்கோ இளைஞரணி மகேஷ் மகளிரணி காளியம்மாள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.