ஒட்டப்பிடாரம் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முறம்பன் கிராமத்தில் புதுக்குளத்தினை சண்முகையா எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஒட்டப்பிடாரம் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முறம்பன் கிராமத்தில் புதுக்குளத்தினை சண்முகையா எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் முறம்பன் கிராமத்தில் பொதுப்பணித்துறை புதுக்குளத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஆண்டு கனமழையால் பாதிக்கப்பட்ட புதுக்குளத்தின் பகுதிகள் மற்றும் மதகுகளின் தன்மை மற்றும் குளத்தின் கரைகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் அழகுமலை ஒன்றிய கவுன்சிலர் மொட்டையசாமி ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சுடலைமணி கிளைச் செயலாளர் சேதுராமன் கிளை பிரதிநிதி முருகன்மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்