இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தருவைகுளம் மீனவர்கள் - சண்முகையா எம்எல்ஏ குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினார்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தருவைகுளம் மீனவ கிராமத்தில் இருந்து கடந்த 21 மற்றும் 23ஆம் தேதி மீன் பிடிக்க சென்ற தருவைகுளம், வேம்பார், மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை கடந்த ஐந்தாம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட 22 மீனவர்களை விடுதலை செய்யவும் மற்றும் இரண்டு விசைப் படகுகளை மீட்டு தர வேண்டும் என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பாமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லியில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் விரைந்து நடவைக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
இன்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தருவைகுளம் மீனவ கிராமத்திற்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தமிழ்நாடு அரசு கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக சண்முகையா எம்எல்ஏ மீனவ குடும்பத்தினரிடம் கூறினார்.