புதிய பயணியர் நிழற்குடை கட்டும் பணி - சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மறவன்மடம் ஊராட்சி ராமநாச்சியார்புரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ 6.50 லட்சம் மதிப்பில் பயணியர் புதிய நிழற்குடை கட்டும் பணியினை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹைக்கோட்ராஜா, ஒன்றிய பொறியாளர் ரவி, வருவாய் ஆய்வாளர் அன்பழகன்,கிராம நிர்வாக அலுவலர் ரவி,தூத்துக்குடி மத்திய ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்கொடி, மாவட்ட கலை இலக்கிய துணை அமைப்பாளர் ஆறுமுகம்,ஒன்றிய துணை செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன்,தலைமை கழக பேச்சாளர் சண்முகநாராயணன், தகவல் தொழில்நுட்ப அணி மணிகண்டன், இலக்கிய அணி பொன்னரசு, அவைத்தலைவர் செல்வராஜ், பொருளாளர் மேகன்ராஜ், பேச்சாளர் அன்பழகன்,கிளைச் செயலாளர்கள் ராமநாச்சியார்புரம் தனசேகர், மறவன்மடம் செல்வின், அ.கைலாசபுரம் கணேசன், வடக்கு சிலுக்கன்பட்டி ஜேம்ஸ், திரவியபுரம் பால்ராஜ், அந்தோணியார்புரம் சார்லஸ், ஊராட்சி செயலர் சத்தியராஜ்,மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.