நாரைக்கிணறு கிராமத்தில் 7 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு கதிரடிக்கும் களம் அமைக்கும் பணி - சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் மருதன்வாழ்வு ஊராட்சி நாரைக்கிணறு கிராமத்தில் 7 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகள் பயன் பெரும் வகையில் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எட்வின் பணி மேற்பார்வையாளர் சங்கர் கொடியன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார் ஊராட்சி செயலர் ராஜன் ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் பிரியா ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் ராகுல் நாரைக்கிணறு கிளை செயலாளர்கள் மனோகரன் சதீஷ் வினோத் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.