செக்காரக்குடியில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் சரிசெய்யும் பணி - சண்முகையா எம்எல்ஏ துவக்கி வைத்தார் .
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி நேற்று மதியம் தொடர் கனமழை வெள்ளத்தின் காரணமாக செக்காரக்குடியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் சென்று பார்வையிட்டார்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி செக்காரக்குடி பகுதிகளில் நேற்று பெய்த கனமழையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.கிராமத்திற்கு சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பொட்டலூரணி - செக்காரக்குடி - சாலை உப்பாற்று ஒடையில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்த நிலையில் மாற்று பாதை அமைக்கப்பட்டு இருந்தது அந்த பாதை வெள்ளநீரால் பாதிக்கப்பட்டது. சாலை ஓரம் ஏற்பட்ட மண் அரிப்புகளை ஜே.சி.பி இயந்திரம் மூலம் சரி செய்யும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா துவக்கி வைத்தார்.
தொடர்ந்து மழை வெள்ளத்தால் உடைப்பு ஏற்பட்ட ஏ.ஜி.எம்.டி ஊரணி செங்குளம் ஊரணி / கிராம தெருக்களில் வெள்ளம் பாதிக்க காரணமான பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம் இருந்து மகிழம்புரம் உப்பாற்று ஓடை வரை உள்ள பிள்ளையார் வாறுகால் தூர் வார வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த இடத்தையும் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சரி செய்து தர உத்தரவிட்டார்.
இந்த நிகழ்வில் திருவைகுண்டம் வட்டாட்சியர் ரத்னாசங்கர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார் அரவிந்தன் உதவி பொறியாளர் தளவாய் கருங்குளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ் காந்தி ஊராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி அய்யம்பெருமாள் ஒன்றிய கவுன்சிலர் ராதா மாரியப்பன் செக்காரக்குடி ஐஸ் மாரியப்பன் கருப்பசாமி சுப்பையா லட்சுமணன் சிவஞானம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.