ஶ்ரீ மூலக்கரை ஊராட்சி தன்னூத்து கிராமத்தில் - முடிவடைந்த கட்டிடப் பணிகள் மற்றும் நீர் தேக்க தொட்டியை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் ஶ்ரீ மூலக்கரை ஊராட்சி தன்னூத்து கிராமத்தில் மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.59 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பொது விநியோக கடை கட்டிடம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 12 லட்சம் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் ஜல்ஜீவன் சேமிப்பு நிதி ரூ.18.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆகிய பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சிவக்குமார் பொது விநியோக திட்ட துணை பதிவாளர் சுப்பராஜ் கூட்டுறவு சார்பதிவாளர் அந்தோணி பட்டுராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ் சின்னத்துரை வட்ட வழங்கல் அலுவலர்கள் ஜெசி பேச்சியம்மாள் ஊராட்சி மன்ற தலைவர் சாதிக் அலி துணை தலைவர் சுப்பிரமணியன் மாவட்ட துணை செயலாளர் ஜெபத்தங்கம் பிரேமா ஒன்றிய கழக செயலாளர் ரவி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பேச்சிமுத்து மகளிரணி வேலம்மாள் கிளைச் செயலாளர் சிங் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.