கோரம்பள்ளத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் சண்முகையா எம்எல்ஏ பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார்.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கோரம்பள்ளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கோரம்பள்ளம், அய்யனடைப்பு, மறவன்மடம் ஆகிய 3 ஊராட்சிப் பகுதி மக்களுக்கு 20க்கும் மேற்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் அடங்கிய மக்களுடன் முதல்வர் குறைதீர்க்கும் முகாமிற்கு ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா தலைமை வகித்து ஒரு பயனாளிக்கு பட்டா வழங்கினார்.
இந்த முகாமில் குடிநீர், வீட்டு வரி, பெயர் மாற்றம், கட்டிட அனுமதி, திடக்கழிவு மேலாண்மை, பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் வேண்டி 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மெகா முகாமில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் உதவி தாசில்தார் ரமேஷ், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பானு, மணிவாசகம், திமுக ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, மாவட்ட பிரதிநிதி நாகராஜ், ஒன்றிய தொழிலாளரணி செயலாளர் மொபட்ராஜன், இளைஞரணி சண்முகநாராயணன், மாணவரணி சற்குணம், வழக்கறிஞரணி மகேந்திரன், நிர்வாகிகள் அருள் ஜெயபால், ராஜ், சின்னதுரை, சண்முகபுரம் சின்னதுரை உட்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.