வல்லநாடு மற்றும் செக்காரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை மாணவ மாணவிகளுக்கு சண்முகையா எம்எல்ஏ வழங்கினார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வல்லநாடு V T V D அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் செக்காரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசால் வழங்கப்படும் பல்வேறு சலுகைகள் குறித்து மாணவ மாணவிகளிடையே எடுத்துக் கூறினார்.
இந்த நிக்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் செக்காரக்குடி பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்குமார் கருங்குளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ்காந்தி கருங்குளம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி ஊராட்சி மன்ற தலைவர் கருங்குளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ராமலட்சுமி அய்யம்பெருமாள் செக்காரக்குடி ஐஸ் மாரியப்பன் சந்திரா முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.