ஓட்டப்பிடாரம் குலசேகரநல்லூர் ஊராட்சியில் 1.29 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணி - சண்முகையா எம்எல்ஏ யூனியன் சேர்மன் ரமேஷ் தொடங்கி வைத்தனர்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குலசேகரநல்லூர் ஊராட்சி காளவாசல் முதல் புதுப்பச்சேரி வரை முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 2.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ 1.29 கோடி மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கொடி அசைத்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
இந்தநிகழ்ச்சியில் வட்டாட்சியர் ஆனந்த் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி உதவி பொறியாளர் ஜெயபால் வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் கிராம நிர்வாக அலுவலர் குருநாதன் ஒன்றிய கவுன்சிலர் மொட்டையைசாமி ஊராட்சி மன்ற தலைவர் வேலாயுதசாமி ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் கோபால் ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன் கிளைச் செயலாளர்கள் சண்முகம் சுடலைமணி மற்றும் கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.