தூத்துக்குடி மாவட்டத்திலயே முதல் முறையாக முதல் தளத்துடன் சமுதாய நலக் கூடம் கட்டும் பணி - சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கொடியங்குளம் கிராம மக்கள் நீண்ட காலமாக தங்கள் கிராமத்திற்கு சமுதாய நலக்கூடம் கட்டித்தர வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா தொடர் முயற்சியில் தமிநாடு அரசின் தாட்கோ மூலம் ரூ 1 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு ஏற்ப்பாடு செய்யப்பட்டது.
அதன்படி இன்று கொடியங்குளம் கிராமத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா அடிக்கல் நாட்டி சமுதாய நலக் கூடம் கட்டும் பணிகளை துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்திலயே முதல் முறையாக முதல் தளத்துடன் உணவு அருந்தும் வளாகத்துடன் இந்த சமுதாய நலக் கூடம் கட்டப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில்முன்னாள் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ்,தாட்கோ உதவி பொறியாளர் பால்பாண்டி,வருவாய் ஆய்வாளர் ராஜேஷ்,கிராம நிர்வாக அலுவலர் நாராயணன்,கொடியங்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார்,முன்னாள் துணை தலைவர் கௌதம், அக்காநாயக்கன்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அய்யாதுரை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி,ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் விக்னேஷ்,ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் ராமலட்சுமி,கிளை செயலாளர்கள் ராஜ்,கோமதி,முருகன்,மகளிரணி சமாதானம்,காளியம்மாள்,மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.