மழைநீர் தேங்கிய பகுதிகளில் மழை நீரை வெளியேற்றும் பணி - சண்முகையா எம்எல்ஏ பார்வையிட்டார்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி 57 - வது வார்டு பகுதிகளில் கன மழையால் அபிராமிநகர் சவேரியார்புரம் ஜோராநகர் காமராஜ்நகர் 58 வது வார்டு ராஜிவ்நகர் நேசமணிநகர் ஆகிய பகுதியில் தேங்கியது மழை நீரை வெளியேற்றும் பணிகளை
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா நேரில் சென்று பார்வையிட்டார்.மழைநீரை விரைந்து வெளியேற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
மாநகராட்சி தெற்கு மண்டல உதவி ஆணையர் கல்யாணசுந்தரம் சுகாதார அலுவலர் ராஜபாண்டி ஸ்பிக் நகர் பகுதி கழக செயலாளர் ஆஸ்கர் வட்டச் செயலாளர்கள் மைக்கேல்ராஜ் சுப்பிரமணியன் பகுதி துணை செயலாளர் கல்பனா ஸ்பிக் நகர் பகுதி இளைஞரணி அமைப்பாளர் ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.