தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வல்லநாடு பாலத்தில் சீரமைப்பு பணி - சண்முகையா எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வல்லநாடு பாலத்தில் சீரமைப்பு பணி - சண்முகையா எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை வல்லநாடு பாலத்தில் சேதமடைந்த பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலை ஆணைய மேலாளர் அகிலேஷ் வருவாய் ஆய்வாளர் மாதவன் கிராம நிர்வாக அலுவலர் கனகலட்சுமி கருங்குளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ் காந்தி கருங்குளம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி ஒன்றிய கழக துணை செயலாளர் சுரேஷ் மாவட்ட பிரதிநிதி முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.