தூத்துக்குடியில் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா -அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அருணா தேவி ரமேஷ் பாண்டியன் தங்க மோதிரம் வழங்கினார்.

தூத்துக்குடியில் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா -அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அருணா தேவி ரமேஷ் பாண்டியன் தங்க மோதிரம் வழங்கினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மக்கள் நல அமைப்பின் அமைப்பாளரும் வழக்கறிஞருமான அருணா தேவி ரமேஷ் பாண்டியன் தங்க மோதிரம் வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தும், மாதா கோவில் சிறப்பு வழிபாடும் செய்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் மன்ற நிர்வாகிகள் மாவட்ட இணை செயலாளர் மோகன், மாவட்ட பொருளாளர். துரைராஜ், வேல்முருகன்,சூர்யா, சங்க ரேஷ்வரன்,இசக்கி துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.