புதுச்சேரி குளோபல் ஹியூமன் பீஸ் யூனிவர்சிட்டி சார்பில் டைகர் சிவாவுக்கு டாக்டர் பட்டம்- முன்னாள் அமைச்சர் சண்முகநாதனிடம் வழங்கி வாழ்த்து பெற்றார்.

புதுச்சேரி குளோபல் ஹியூமன் பீஸ் யூனிவர்சிட்டி சார்பில் டைகர் சிவாவுக்கு டாக்டர் பட்டம்- முன்னாள் அமைச்சர் சண்முகநாதனிடம் வழங்கி வாழ்த்து பெற்றார்.

புதுச்சேரியில் குளோபல் ஹியூமன் பீஸ் யூனிவர்சிட்டி சார்பில் டாக்டர் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது விழாவில் தூத்துக்குடி அதிமுக 39 வது வார்டு மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் பரமேஸ்வரன் (எ) டைகர் சிவா-விற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று தூத்துக்குடி டூவிபுரத்தில் அமைந்துள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் டைகர் சிவா நேரில் சென்று தனக்கு வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டத்தை முன்னாள் அமைச்சர் தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதனிடம் வழங்கி வாழ்த்து பெற்றார்.

இந்த நிகழ்ச்சியில், கருங்குளம் பேரூராட்சி சேர்மன் புவனேஷ்வரி சண்முகநாதன், 39 வது வார்டு வட்டச் செயலாளர் திருச்சிற்றம்பலம், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், வட்டச் செயலாளர் மனுவேல், பாலாஜெயம், ஆனந்த், சாம்ராஜ், சொக்கலிங்கம், பிராங்கிளின், சுப்பிரமணி யுவன் பாலா ஆகியோர் உடனிருந்தனர்.