தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் - ஆணையர் மதுபாலன் கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் - ஆணையர் மதுபாலன்  கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பெயரில் வாரம் தோறும் புதன் கிழமை தோறும் மண்டலம் வாரியாக பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமானது நடைபெற்றுவருகிறது. 

மண்டலங்களில் நடைபெறும் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்து வரி விதிப்பு, சொத்து வரி மற்றும் குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, வர்த்தக உரிமம், பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்குதல், மற்றும் பெயர் திருத்தம், கட்டிட உரிமம் பெறுதல், தெருவோர வியாபாரிகள் நலத் திட்டம் குறித்து மனுக்கள் பெறப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இன்று (11.09.2024) தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தலைமையில், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மேற்கு மண்டல தலைவர் அன்னலெட்சுமி முன்னிலையில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

முகாமில் பொது மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை மனுக்களாக ஆணையர் மதுபாலன் அவர்களிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட ஆணையர் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு உடனடி தீர்வு காண படும் என்று உறுதியளித்தார்.

முகாமில் துணை ஆணையர் ராஜா ராம், பொது குழு உறுப்பினர் கோட்டு ராஜா, கவுன்சிலர்கள் சந்திரபோஸ், பொன்னப்பன், இசக்கிராஜா,விஜயலெட்சுமி, மாநகராட்சி அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள், மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.