தூத்துக்குடியில் மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் - மேயர் ஜெகன் பெரியசாமி பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலம் சார்பில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், முன்னிலையில் நடைபெற்றது.
முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது இதற்கு முன்னதாக வடக்கு மண்டலம் மற்றும் மேற்கு மண்டலத்தில் புதன் கிழமை தினத்தன்று பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று முடிந்தது என்றும், நடந்து முடிந்த முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது என்றும், தற்போது நடைபெற்று கொண்டு இருக்கின்ற கிழக்கு மண்டலம் சார்பில் பொது மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பொது மக்கள் தங்கள் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குறைகளை மனுக்களாக கொடுக்கும் பட்சத்தில் உடனடி தீர்வு காணப்படும் என்றும், இந்த முகாமின் நோக்கம் வெறும் மனுக்களை மட்டும் பெறுவது என்பது இல்லை, பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு பிறகு தான் அடுத்த பணிகள் நடைபெறும் என்றும், பொது மக்களின் குறைதீர்க்கும் முகாம் மூலம் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களிலும், குறைகள் இல்லாமல் இருக்கவே இந்த முகாமானது நடைபெறுகிறது. அடுத்து வாரம் புதன் கிழமை தெற்கு மண்டலத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் என்றும் மேயர் பேசுகையில் தகவல் தெரிவித்தார்.
இந்த முகாமில் துணை மேயர் ஜெனிட்டா கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி மாமன்ற உறுப்பினர்கள்
மாநகராட்சி அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.