தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் _ மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் _ மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

04.09.24 அன்று நடைபெற்றது. முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார். மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ் வரவேற்றார்.

முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

 

பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க ஊராட்சி பகுதியில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின்படி மக்கள் குறை கேட்பு முகாம் நடைபெறுவதை போல் மாநகராட்சி பகுதியிலும் ஓவ்வொரு வாரமும் மண்டலம் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. பெறப்படும் மனுக்கள் மீது முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படுகிறது, சிறப்பு நடவடிக்கையாக குடிநீர் இணைப்புக் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு உடனுக்குடன் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இது வரை இரண்டாயிரத்திற்க்கும் மேற்பட்ட சாலைகள் போடப்பட்டுள்ளது, பொதுமக்கள் சாலைகளில் கட்டடக் கழிவுகள், கற்கள், மணல்களை போட்டு வைக்கக்கூடாது, என்றார். 

இந்த முகாம் நிகழ்ச்சியில், உதவி ஆணையர் சுரேஷ்குமார், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரங்கநாதன், மாநகர உதவி பொறியாளர் சரவணன், நகர்நல அலுவலர் வினோத்ராஜா, மாமன்ற உறுப்பினர்கள் கீதா முருகேசன், ரெங்கசாமி, பவானி மார்ஷல், நாகேஸ்வரி, அந்தோணி மார்ஷலின், தேவேந்திரன், கற்பகக்கனி, போல்பேட்டை திமுக பிரதிநிதி பிரபாகர், ஜோஸ்பர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.