தூத்துக்குடி வர்த்தக ரெட்டிபட்டியில் தனியார் சோலார் பவர் நிறுவனத்தின் அத்துமீறல்களை கண்டித்து பொதுமக்களை திரட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்ட திட்டம் .

தூத்துக்குடி வர்த்தக ரெட்டிபட்டியில் தனியார் சோலார் பவர் நிறுவனத்தின் அத்துமீறல்களை கண்டித்து பொதுமக்களை திரட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்ட திட்டம் .

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி வட்டம் வர்த்தகரெட்டிபட்டி வருவாய் கிராமத்தில் வசித்து வரும் சங்கர்  எனக்கு சொந்தமான புல எண் 209 / 4B மற்றும் வண்டிப்பாதை,குளங்களில் அத்துமீறி நடப்பட்டுள்ள தனியார் சோலார் பவர் மின் கம்பங்களை அகற்ற வேண்டி சார்ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி வட்டம் வர்த்தகரெட்டிபட்டி வருவாய் கிராமத்தில் எங்களுக்கு சொந்தமான புன்செய் நிலம் சர்வே எண் - 209 / 4B ல் உள்ளது . இந்த நிலத்தில் எங்களிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் தனியார் காற்றாலை நிறுவனம் மின்கம்பங்களை நட்டியுள்ளது .

அதே போன்று மக்கள் பயன்படுத்திவரும் வர்த்தகரெட்டிபட்டி , பொட்டலூரணி செல்லும் வண்டி பாதையிலும் மின் கம்பங்கள் நட்டியுள்ளது .மேலும் வர்த்தகரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசன் குளத்திலும் மின்கம்பங்கள் நட்டியுள்ளது . 

அதே போன்று பொதுமக்கள் விவசாய பணிகளுக்கு பயன்படுத்தி வந்த வண்டிப்பாதைகளில் தனியார் நிறுவனம் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து மின்கம்பங்கள் நட்டுள்ளதால் விவசாய காலங்களில் விவசாயிகள் பயன்படுத்த கூடிய டிராக்டர்கள் ,அறுவடை இயந்திரங்கள் பாதைகளில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது . 

இதனால் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் விவசாயம் செய்ய இயலாத சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது . குளங்களில் மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குளிப்பதற்கும்,

குளத்தில் ஆடு , மாடுகளை குளிப்பாட்டவும் மக்கள் பயன்படுத்தும் குளத்தில்  மின்சாரம் செல்லக்கூடிய மின்கம்பிகள் நடப்பட்டுள்ளது அது அறுந்து விழுந்தோ அல்லது மின்கம்பங்கள் சாய்ந்தாலோ உயிர்சேதம் ஏற்ப்படும் என்ற அச்சம் அப்பகுதி பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.

இது போன்று பொதுமக்கள் பயன்படுத்தி வந்த அரசு நிலங்களான வண்டிப்பாதை மற்றும் குளங்களில் அத்துமீறி நடப்பட்டுள்ள தனியார் சோலார் பவர் மின்உற்பத்தி நிறுவனத்தின் மின்கம்பங்களை அகற்ற வர்த்தகரெட்டிபட்டி கிராம நிர்வாக அலுவலரிடம் நேரில் சென்று நான் புகார் தெரிவித்த போது அவர் வண்டிப்பாதைகளிலும் குளத்திலும் நட்டினால் உங்களுக்கென்ன உங்க வேலைய நீங்க பாருங்க என அலட்சியமாக பதில் தெரிவித்தார் . 

நீங்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் நான் தாசில்தாரிடம் புகார் அளிப்பேன் என கூறியதற்கு தாசில்தார் எனது உறவினர்தான் அதனால் எனை ஒன்றும் செய்ய முடியாது என அலட்சியமாக பதில் தெரிவித்தார் இவரின் அலட்சியப் போக்கால் எங்களது கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பொது மக்களின் உயிருக்கும் எந்தவித பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது . 

எனவே அரசினுடைய சொத்துக்களையும் பொதுமக்களுடைய உயிருக்கும் ஆபத்து என்ற சூழல் ஏற்படுகிற போது அதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அந்த கிராம நிர்வாக அலுவலரையே சாரும் ஆனால் , இவர் பொதுமக்களுக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டு தனியார் மின்உற்பத்தி நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு அரசு நிலத்தை பாதுகாக்க தவறியுள்ளது தெளிவாக தெரிகிறது .

எனவே எனது மேற்கண்ட புகாரில் தெரிவித்துள்ளவாறு எனக்கு சொந்தமா நிலத்திலும் , அரசுக்கு சொந்தமான வண்டிப்பாதை மற்றும் குளங்களிலும் அத்துமீறி நடப்பட்டுள்ள மின்கம்பங்களை அகற்றுவதற்கும் தனியார் மின்உற்பத்தி நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டுவரும் கிராம நிர்வாக அலுவலர் , குறுவட்ட வருவாய் ஆய்வாளர் , வட்டாட்சியர் ஆகியோர் மீது 20.04.2023 அன்றுக்குள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 21.04.2023 அன்று தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் எனவும் அவர் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.