வாக்குசாவடி நிலை முகவர்கள் (BLA 2) ஆலோசனை கூட்டம் - சண்முகையா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும் தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோரது வழிகாட்டுதலின்படி
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் வாக்குசாவடி நிலை முகவர்கள் (BLA 2) ஆலோசனை கூட்டம் ஒட்டநத்தம் சமுதாய நலக்கூடத்தில் வைத்து ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமையில் நடைபெற்றது.
நவம்பர் 16,17 மற்றும் 23,24 ஆகிய தேதிகளில் நடைபெறும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,நீக்கல் முகாமில் பாக முகவர்கள் கலந்து பணியாற்ற வேண்டும்.
நவம்பர் 27 ல் பிறந்தநாள் காணும் தமிழ்நாடு துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும்
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கினங்க 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அயராது உழைத்திடவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் மாநில இலக்கிய அணி துணை செயலாளர் பெருநாழி போஸ் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் பொதுக்குழு உறுப்பினர் மாடசாமி செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு கருங்குளம் யூனியன் சேர்மன் ராஜேந்திரன் அரசு வழக்கறிஞர் பூங்குமார் மற்றும் பாக முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.