எட்டயபுரம் ஆட்டு சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் எட்டயபுரம் நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் கோரிக்கை மனு.
விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் மற்றும் எட்டையாபுரம் நகர கழக செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் எட்டையாபுரம் பேரூராட்சி உதவி நிர்வாக அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில் குறிப்பிடப்பட்டதாவது எட்டையாபுரம் பகுதியில் வாரம் ஒரு முறை நடைபெறும் ஆட்டுச் சந்தையில் அடிப்படை வசதிகளான குடிநீர் கழிப்பிடம் போன்ற வசதிகள் இல்லாத காரணத்தினால் சனிக்கிழமை தோரும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வியாபாரத்திற்காக ஆடுகளை ஏற்றி வரும் வியாபாரிகளுக்கு எட்டையாபுரம் பேரூராட்சி சார்பில் குடிநீர் கழிப்பிடம் போன்ற வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் அ .தி.மு.க எட்டயபுரம் பேரூர் கழகம் சார்பில் எட்டயபுரம் பேரூராட்சியை கண்டித்து எட்டயபுரம் நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் அணி செல்வி, சாந்தி, நகர அவைத் தலைவர் சேனா கணபதி. காட்டன் பிரபு உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.