தூத்துக்குடி துறைமுகத்தில் தீயணைப்புத்துறை ஊழியரான கலைச்செல்வனை மர்ம மரணம் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

தூத்துக்குடி துறைமுகத்தில் தீயணைப்புத்துறை ஊழியரான கலைச்செல்வனை கடந்த 13.04.23 அன்று கொலை செய்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டி ஆட்சியரிடத்தில் புகார் மனு அளித்தார் .
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் . சர்வேயராக பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்போது வீட்டில் இருந்து வருகிறேன் .எனக்கு சௌந்தரி மற்றும் கலைச்செல்வன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர் . மகள் சௌந்தரிதிருமணம் செய்து கொடுத்து விட்டேன் . மகன் கலைச்செல்வனுக்கு சென்னையை சேர்ந்த முத்தையா என்பவரின் மகள் நிவேதா என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தேன் திருமணத்தின் பயனாக அவர்களுக்கு ஒரு 6 மாத குழந்தை உள்ளது . ஆனால் கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் . இந்நிலையில் எனது மகன் கலைச்செல்வன் தூத்துக்குடி துறைமுகத்தில் தீயணைப்புத் துறையில் கடந்த 5 வருடமாக பணிபுரிந்து துறைமுக கோர்ட்டர்ஸ் ஆன பாரதி நகர் டைப் 1 , no 202 பிளாக்கில் வசித்து வருகிறார்.
கடந்த 13.04.23 தேதியில் இரவு 10 மணிக்கு வேலைக்கு செல்லாததால் 2nd shift வேலை முடிந்த fire sub officer சுந்தரபெருமாள் என்பவர் ரமேஷ் என்பவரை அனுப்பியுள்ளார் கலைச்செல்வன் வீட்டில் இல்லாமல் வீடு திறந்திருக்கிறது என்று கூறியுள்ளார் . அதன்பிறகு வீட்டிற்கு வந்த சைபின் , ஜீவராஜ் ஆகியோர் எனது மகன் குடியிருக்கும் வீட்டிலிருந்து பக்கத்து வீட்டிற்கு ஒதுக்குபுறமான பின்பகுதியில் இறந்து கிடப்பதாக கூறியுள்ளார்கள் .
அதன்பிறகு இரவு சுமார் 11:45 மணிக்கு துறைமுகம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள் அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு இறந்து இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார்கள் . மறுநாளான 14.04,23 அன்று அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை செய்து உஞலை என்னிடம் கொடுத்தார்கள் . நான் போலீஸ்ல் எனது மகனை கொலை செய்துள்ளார்கள் என்று கூறினேன் . அதற்கு போலீஸார் post morterm report வரட்டும் என்றார்கள் . தற்போது இரண்டு தினங்களுக்கு முன்பு போஸ்ட் மாடம் ரிப்போர்ட்டை நான் வாங்கினேன் . அதில் final opinion- ல் அதில் உடம்பில் பல இடங்களிலும் காயங்கள் பட்டு சிக்கலான முறையில் இறந்துள்ளதாக கூறியுள்ளார்கள் . இரண்டு மாடிக்கு மேலிருந்து கீழே விழுந்தால் கை கால்கள் மூட்டுப்பகுதி எலும்புகள் உடைந்திருக்கும் மற்றும் தலை பகுதி போன்றவை சிதறி மண்டை உடைந்திருக்க வேண்டும் . ஆனால் எந்த வெளிக்காயமும் இல்லாமல் உடம்பு முழுவதும் உள் காயங்களாக காணப்பட்டிருக்கிறது மேலும் கால்களின் பாதம் இரண்டு பகுதிகள் மட்டும் திருக்கி முருக்கி உடைத்திருக்கிறார்கள் . கீழே விழுந்து இறந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை . மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை ஏனென்றால் . காலை 8.35am மணிக்கு அவனது 13 ம் தேதி லீவு அம்மாவான எனது மனைவிக்கு போன் செய்து மதியம் வீட்டுக்கு வருகிறேன் என்று கூறியுள்ளான் அதன்படியாக பணிபுரியும் இடத்தில் விடுமுறை எடுத்து ஏர்வாடியில் உள்ள அம்மா வீட்டுக்கு கிளம்பி திருநெல்வேலி வரை வந்த நிலையில் பணிபுரியும் இடத்தில் இருந்து போன் செய்து மீண்டும் பணிக்கு வருமாறு கூறியுள்ளார்கள் மறுநாள் லீவு எடுத்துக்கொள் என்று கூறியுள்ளார்கள் . எனவே வீட்டுக்கு வராமல் பாதிலயே திருநெல்வேலியில் இருந்து பணிக்கு திரும்பியுள்ளான் மேலும் என் மனைவியிடம் தனது ரூம் மெட் சுரேஷ் என்பவர் அவனது சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு சென்று விட்டான் என்றும் . இன்னொரு ரூம் மெட் சைபின் என்பவர் பக்கத்து type 1 க்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக மாறிவிட்டார் அவனது மனைவியை ஊருக்கு அனுப்பி விட்டார் . எனக்கு சைபின் ஜீவா மற்றும் மனைவி நிவேதாவின் உடன்பிறந்த சகோதரன் பாலமுருகன் ரூம் மெட் சுரேஷ் உடன் பணிபுரியும் டொனால்டு ஆகியோரால் எனக்கு இடையூறும் அச்சுறுத்தலும் உள்ளது . நிவேதாவின் அண்ணன் பாலமுருகன் மேற்படி நபருடன் தொடர்பில் உள்ளான் . ஆகையால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கூறினான் மேலும் மற்றவற்றை நேரில் வந்து விவரமாக சொல்கிறேன் என்றான் . எனது மகன்எங்களிடம் பேசி இரண்டு மணி நேரத்தில் இறந்துள்ளான் .
ஏற்கனவே எனது மகனின் மாமனார் முத்தையா , மாமியார் சாந்தி மைத்துனர் பாலமுருகன் ஆகியோர் எனது மகனை ஏற்கனவே அடித்து மிரட்டி அவனது மனைவி நிவேதாவை அழைத்து சென்றார்கள் எனது மகனை கொல்லாமல் விடமாட்டோம் என்றும் கூறியுள்ளார்கள் . எனது மகனின் மைத்துனர் பாலமுருகன் சாப்ட்வேர் இன்ஜினியராக இருப்பதால் யாருடைய மொபைலையும் ஹேக்கிங் பண்ணுவது டிராக்கிங் பண்ணுவது , யாரிடம் பேசுகிறார்கள் என்று வேவு பார்ப்பது போன்ற அனைத்து பணிகளையும் மேற்கொள்வார் . எனது மகன் வைத்திருக்கும் மொபைலும் அவன் வாங்கி கொடுத்தது தான் எனவே என் மகன் யாரிடம் பேசினாலும் என்ன செய்தாலும் அவன் அதை கண்டுபிடித்து மற்றவர்களுக்கு தகவலாக அனுப்புவான் . எனவே எனது மகன் இறப்பதற்க்கு இரண்டு நாட்களுக்கு முன்பு புதிதாக வேறொரு மொபைல் போன் வாங்கினான் . எனவே என் மகனை மேற்படி நபர்கள் கூட்டாக , திட்டமிட்டு சதி செய்து , அடித்து கொலை செய்து மக்கள் நடமாட்டம் இல்லாத ஒதுக்கு புறமான பகுதியில் தூக்கி போட்டுவிட்டு , மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து விட்டான் என்று நாடகம் ஆடுகிறார்கள் . எனது மகன் இறப்பு பரிசோதனை அறிக்கையில் எனது மகன் தற்கொலை செய்ததற்கான எந்த முகாந்திரமும் குறிப்பிடவில்லை . மேலும் கொலைக்கான அனைத்து முகந்திரமும் இருப்பதாக பிரேதபரிசோதனை அறிக்கையில் உள்ளது . " . ஆகவே ஐயா அவர்கள் மேற்கண்ட எனது புகார் மனுவின் படி , மேற்படி நபர்கள் , வீட்டின் அருகில் உள்ளோர்கள் உடன் பணிபுரிந்த நபர்கள் அனைவரையும் விசாரணை செய்து எனது மகன் உபயோகித்த இரண்டு மொபைல் போன்கள் , பிரேத பரிசோதனை அறிக்கை , போன்றவற்றை ஆய்வு செய்து எனது மகனை கொலை செய்த நபர்களை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் கொடுத்த மனதில் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகம் உள்ள நபர்களின் பெயர் விபரம் :பாலமுருகன் முத்தையா ராமன் பாண்டியன் சாந்தி நிவேதா முத்தையா சைபின் சுரேஷ் டொனால்ட் ரமேஷ்
மேற்கண்ட நபர்களுக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது நகல்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தனிப்பிரிவு சென்னை மாண்புமிகு காவல்துறை தலைவர் அவர்கள் சென்னை மாண்புமிகு காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் திருநெல்வேலி மாண்புமிகு தென்மண்டல காவல்துறை தலைவர் மதுரை 5உயர்திரு மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் அவர்கள் தூத்துக்குடி மாண்புமிகு எஸ்சிஸ்டி ஆணைய தலைவர் அவர்கள் சென்னை உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தூத்துக்குடி உயர்திரு துறைமுக சேர்மன் அவர்கள் துறைமுகம் வளாகம் தூத்துக்குடி உயர்திரு துறைமுக தீயணைப்புத் துறை அதிகாரி அவர்கள் துறைமுகம் தூத்துக்குடி மாண்புமிகு மனித உரிமை ஆணையர் அவர்கள் சென்னை மாண்புமிகு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.