ஓட்டப்பிடாரத்தில் சட்டவிரோதமாக இயங்கிவரும் குவாரியை மூடக்கோரியம் உரிமையாளர் காசிலிங்கம் மேலாளர் சேர்மதுரை ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் சங்கம் சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு.
ஓட்டப்பிடாரம் ஊராட்சி புதியம்புத்தூர் கிராமம் காசிலிங்கம் தபெ.கருப்பசாமி என்பவர் பெயரில் G.M./1/447/2018ன் படி நாள் : 03.09.2024 முதல் 02.09.2034 வரை 10 ஆண்டுகளுக்கு சர்வே எண் 663/2 2ஹெக்டர் 5 ஏக்கரில் குவார்ட்சைட் குவாரி சட்டத்திற்கு புறம்பாக கனிம வள வீதிகளுக்கு பின்பற்றாமல் முறையாக பரீசிலிக்காமல் தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அவர்களால் பவளப்பாறை எனப்படும் விலை மதிக்கமுடியாத கண்ணாடி கல்பாறையை வெடி மருந்து வைத்து உடைத்து நெருக்கி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி (Export) செய்வதற்கு ஏதுவாக சட்ட விரோதமாக கொடுக்கப்பட்டுள்ள குவார்சைட் உரிமத்தை ரத்து செய்திட வேண்டி பல்வேறு புகார் மனுக்கள் பல்வேறு ஆட்சேபனை மனுக்கள் விவசாய பொதுமக்களால் கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி உரிமத்திற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாய பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்திடவும் அதுவரை மேற்கண்ட குவார்ட்சைட் குவாரி உரிமைத்தை நிறுத்திவைக்கவும் நடவடிக்கை எடுத்திட வேண்டி.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம். ஓட்டப்பிடாரம் ஒன்றியம் சர்வே எண்ணில் 663/2 2 ஹெக்டர் 5 ஏக்கரில் காசிலிங்கம் தபெ.கருப்பசாமி புதியம்புத்தூர் என்பவருக்கு கொடுக்கப்பட்டுள்ள குவார்செட் குவாரி புவியியல் மற்றும் கனிம எடுக்கும் உரிமத்திற்கு அடிப்படை தகுதியில்லாமல் கொடுக்கப்பட்டுள்ளது.
1. மேற்படி குவார்சைட் குவாரி சர்வே எண் 663 2ல் கொடுக்கப்பட்டுள்ள உரிமம் உள்ள இடத்தில் பொதுமக்களால் பவளப்பாறை என கூறப்படும் கண்ணாடி பாறை விலைமதிப்பிள்ளாத கோடிகளைத் தாண்டும். அரசுக்கு பலகோடி இழப்புகளை ஏற்படுத்தும்.
2. மேற்படி சர்வே எண் 663 2ல் கொடுக்கப்பட்டுள்ள உரிமம் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளது. மேலும் குவார்சைட்குவாரியில் வைக்கப்படும் அதி பயங்கர வெடி மருந்து கட்டிடங்களுக்கும். விவசாய பணியில் ஈடுப்படும் பொதுமக்களுக்கு பெருந்த உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
3. சர்வே எண்ணில் 663/2 2ஹெக்டர் 5 ஏக்கரில் உள்ள குவார்சைட் குவாரி மிக அருகில் வனத்துறைக்கு சொந்தமான 100க்கணக்கான அறிய வகை மான்கள் பல்வேறு விலங்கினங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. குவாரியில் உள்ள விலங்குள் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
4. சர்வே எண்ணில் 663/2 2ஹெக்டர் 5 ஏக்கரில் உள்ள குவார்சைட் குவாரி உள்ள இடத்தில் அருள்மிகு.ஸ்ரீ விஸ்வநாத கோவிலுக்கு பாத்தியப்பட்ட இந்து சமயஅறநிலை துறைக்கு சொந்தமான 100 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் குவாரிசைட் உள்ள நிலத்தின் வழியாக பெரியகுளம் கண்மாய்க்கு வரும் பெரிய ஓடை பகுதியில் சேதப்படுப்பட்டு மழை நீர்வரத்து பாதிக்கப்படும் அபாயகர சூழல் உள்ளது.மேலும் இந்து சமயஅறநிலைத்துறைக்கு சொந்தமான நிலத்தில் பவள பாறை கண்ணாடிபாறைகளை திருட்டுதனமாக எடுக்க வாய்ப்புள்ளது.
5. சர்வே எண்ணில் 663/2 2ஹெக்டர் 5 ஏக்கரில் உள்ள குவார்சைட் குவாரி அனுமதிக்கு அருகில் உள்ள பட்டாதாரர்கள் விவசாயிகள் பொதுமக்களிடம் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் போர்ஜரி A1 நோட்டிஸ் தயாரிக்கப்பட்டதாக தெரியவருகிறது.
6. சர்வே எண்ணில் 663/2 2ஹெக்டர் 5 ஏக்கரில் உள்ள குவார்சைட் குவாரி அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தில் விலைமதிக்க முடியாத பவள பாறைகள் கண்ணாடிகள் உடைத்து நெருக்கி எடுத்து செல்லும் கனரக வாகனங்களில் ஊசி போன்ற கூர்மையான கற்கள் வழி நெடுகிலும் பாதையில் சிந்தி சிதறி விவசாயிகள் பொதுமக்கள் கால்களில் பதம் பார்ப்பதற்கு வாய்ப்புள்ளது. குவாரி சைட்டிற்கு பயன்படும் இராட்சத கிட்டாட்சி, ஜே.சி.பி, வெடிமருந்து வைக்க பயன்படும் கம்பிரவுசர் வாகனங்கள் வந்து செல்லவதற்கு ஒரே பாதை மங்கமாள் சாலை வழியாக பெரிய குளம் ஓடை பகுதியில் பாதை அமைத்துள்ளார்கள். மேற்படி பாதைகள் விவசாயிகள் விவசாய நிலத்திற்கு செல்வதற்கும் விவசாய விலை பொருட்களை கொண்டு செல்லுவதற்கு சிறிய வகை வாகனங்கள் செல்லுவதற்கு மட்டும் பயன்படும் விவசாய பாதையில் மேற்படி குவார்சைட் குவாரியால் இடையூறு ஏற்படும் அதனால் தேவையில்லாமல் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு குவாரியின் அனுமதியை ரத்து செய்திடவும் காசிலிங்கம் சேர்மதுரை ஆகியோர் மீது உரியை நடவடிக்கை எடுத்திடவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஓட்டப்பிடாரம் பெரியகுளம் கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் விவசாய சங்கம் கோரம்பள்ளம், ஆறுவடிநிலம், பொதுப்பணித்துறை தலைவர்:O.T. கொம்புமகாராஜா 41/10, தெற்குத்தெரு, ஓட்டப்பிடாரம்.தாலுகா தூத்துக்குடி மாவட்டம். 9629209377 A.முத்துப்பாண்டி ,த/பெ எட்டப்பன்,4/404 நடுத்தெரு, (மேல மீனாட்சிபுரம்) ஓட்டப்பிடாரம் தாலுகா, தூத்துக்குடி மாவட்டம் - 628401 8754848664 இ.சுப்பிரமணியன் (ஓட்டப்பிடாரம் அருள்மிகு.ஸ்ரீ விஸ்வநாத திருக்கோயில் சாமி அறங்காவலர் தலைவர்)த/பெ.இசக்கியாபிள்ளை, 2/73, மெயின் பஜார், ஓட்டப்பிடாரம் - 628401.ஓட்டப்பிடாரம் தாலுகா தூத்துக்குடி மாவட்டம்.: 9442948540 டாக்டர்.மு.மா. செல்வமுருகன் த/பெ.முருகன் வடக்கு ரத வீதி P.K.R. Complex ஓட்டப்பிடாரம்-628401Cell: 8778692323 ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.