பெருங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா!.- போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு புவனேஸ்வரி சண்முகநாதன் பரிசு வழங்கினார்.
பெருங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சி பெருங்குளம் பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் பொன்ராணி வரவேற்புரை ஆற்றினார். இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பளராக பெருங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் டாக்டர் புவனேஸ்வரி சண்முகநாதன் கலந்து கொண்டார்.
ஆண்டு விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு டாக்டர் புவனேஸ்வரி சண்முகநாதன் பரிசு வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் ஏரல் காவல் நிலை ஆய்வாளர் மேரி ஜெமிதா, பெருங்குளம் பேரூராட்சி கவுன்சிலர்கள்,சண்முகத்தாய், கண்ணம்மா, செ.முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டார்.