பெரியாரின் 146 வது பிறந்தநாள் விழா - மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு.

தூத்துக்குடியில் இன்று (17.09.2024) சமூக நீதி போராளி பெரியாரின் 146 பிறந்தநாளையொட்டி தமிழ் சாலை ரோடு தெற்கு காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு திமுக சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி மேயரும், பொதுக்குழு உறுப்பினருமான ஜெகன் பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும். என்று முதல்வர் ஸ்டாலின் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
அன்றைய தினம் சமத்துவம், சகோதரத்துவம், சமதர்ம, கொள்கைக்காக என்னை நான் ஒப்படைத்து கொள்வேன் என்று உறுதிமொழி எடுக்குமாறு தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி தூத்துக்குடியில் கலைஞர் அரங்கத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பெரியாரின் திருவுருவ படத்திற்கு முன்பு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க செயலாளர் ஆனந்த சேகரன் அவர்களும் தி.மு.க வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் மாவட்ட கழக பொருளாளர் சுசி. ரவீந்திரன் துணைச் செயலாளர்கள் ஆறுமுகம்,ராஜ்மோகன் செல்வின், மண்டல தலைவர்கள் நிர்மல் ராஜ் கலைச்செல்வி மாமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன் சுரேஷ்குமார் கீதா முருகேசன் பொன்னப்பன் சரவணகுமார் தெய்வேந்திரன் வைதேகி பகுதி செயலாளர் ரவீந்திரன் முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம் மருத்துவர் அணி அருண் குமார் மற்றும் மகளிர் அணியினர் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.