ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனு அளிக்க ஆட்சியர் அலுவலகம் வந்த மக்கள் நல அமைப்பு அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் போலீஸ் தடுத்த நிறுத்தி வாக்குவாதம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 50க்கும் மேற்பட்ட பெண்களுடன் மனு கொடுக்க வந்த மக்கள் நல அமைப்பு அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியனுடன் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ய ஈடுபட்ட போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
நாங்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனு அளிக்க ஆட்சியர் அலுவலகம் வந்திருக்கிறோம் காவல்துறை சொல்லிய இடத்தில் தான் நாங்கள் கூடியிருகிறோம் ஆனால் நாங்கள் சாலை மறியலில் ஈடுபடுகிறோம் என்றும் காவல்துறை அனுமதித்தால் நாங்கள் ஆட்சியரிடம் மனு கொடுக்க இருப்பதாகவும் கூறிய நிலையில் காவல்துறையினர் அராஜகமாக கைது செய்ய முற்படுகின்றனர் எனவே இது சட்டப்படி தவறான செயலாகும் என அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கூறுகின்றனர் இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அருணா தேவி ரமேஷ் பாண்டியன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் தளங்களில் வன்மையை தூண்டும் வகையில் உள்ளதால் தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பொதுமக்களின் கருத்தாக உள்ளது ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்ற வேண்டும் என கபட நாடகம் ஆடி வருகிறது இதே போல் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை ஈடுபட்டு வந்தால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் எனவே மாநில அரசும் மத்திய அரசும் இதற்கு அனுமதிக்காமல் தமிழக அரசு சட்டமன்றத்தில் இதற்கு ஒரு தீர்மானம் ஏற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நல அமைப்பு அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கூறினார்.