தூத்துக்குடிக்கு உதயநிதி வருகை 100 லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்ய முடியாமல் வீணாகியது மாற்றுத்திறனாளி வேதனை.
தூத்துக்குடிக்கு இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திமுக இளைஞரணி செயளாலர் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றாக தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள மாணிக்க மஹாலில் வைத்து திமுக மூத்த முன்னோடிகளுக்கு தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்டத்தின் சார்பில் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு வரவிருந்த உதயநிதி ஸ்டாலினை வரவேற்கும் விதமாக சாலை இருபுறங்களிலும் டிஜிட்டல் பேனர் அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி நடைபெரும் மாணிக்க மஹால் எதிரே மாற்றுத்திறனாளி முனீஸ்வரன் என்பவரின் ஆவின் பாலகம் அமைந்துள்ளது அந்த பாலகத்தின் முன்பு முழுவதுமாக மறைத்து தூத்துக்குடி 45 வார்டு திமுக சார்பில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டு கடை முழுவதும் வெளியே தெரியாத வண்ணம் மறைக்கப்பட்டிருந்தது. இதனால் கடை அங்கு இருப்பது வெளியில் இருப்பவர்களுக்கு தெரியாத வண்ணம் இருந்ததனால் பாலகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 100 லிட்டர் பால் வீணாகிவிட்டது என்று மாற்றுத்திறனாளி முனீஸ்வரன் வேதனை தெரிவித்தார்.
இது ஒவ்வொரு முறையும் இந்த மஹாலில் நடைபெறும் விழாக்களின் பொழுதும் இது போன்ற நிலையே ஏற்படுகிறது மாற்றுத்திறனாளியான நான் இதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தினை பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றேன் இது போன்ற நிகழ்வு வாரத்திற்கு ஒரு முறை நடைபெறுவதால் எனது வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்று வேதனை தெரிவித்தார்.
இது போன்ற நிகழ்வுகள் வரும் நாட்களில் நடைபெறாமல் இருக்க நிகழ்ச்சியின் ஏற்பாட்டார்கள் உரிய நடவடிக்கையை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.