பாண்டியன் (எ) பாண்டியபதி தேர் மாறன் நினைவு தினம் - பாஜக தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மரியாதை!

பாண்டியன் (எ) பாண்டியபதி தேர் மாறன் நினைவு தினம் - பாஜக தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மரியாதை!

தூத்துக்குடியில் ஆங்கிலேயர்களை எதிர்த்து கடைசி வரை தீரத்துடன் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், மற்றும் ஊமைத்துரை, ஆகியோருக்கு கப்பல் மூலம் ஆயுதங்கள் சென்றடைய உதவிய சுதந்திர போராட்ட வீரர் மன்னர் தொன் கபிரியேல் தெக் குரூஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியன் (எ) பாண்டியபதி தேர் மாறன் நினைவிடத்தில் இன்று (19.10.2024) மாலை லசால் பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த திருவுருவ படத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி அமமுக மாவட்ட செயலாளர் பிரைட்டர், பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், ஓ பி சி அணி மாநில செயலாளர் விவேகம் ரமேஷ் அனைத்து பரத குல ஊர் நலக் கமிட்டி, தேர் மாறன் கல்லறை மீட்புக்குழு, நெய்தல் எழுத்தாளர்கள், வாசகர்கள் இயக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்