ஓட்டப்பிடாரம் கனமழை வெள்ளத்தில் ராசங்குளம் கண்மாயில் ஏற்பட்ட உடைப்பை தனது சொந்த செலவில் 1 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைத்த கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா.
ஓட்டப்பிடாரம் கடந்த 17,18 தேதிகளில் பெய்த கனமழை பெருவெள்ளத்தால் ஓட்டப்பிடாரம் ஊராட்சிக்கு உட்பட்ட முப்புலிவெட்டி ராசங்குளம் கண்மாய் உடைந்து சேதடைந்தது.
புதியம்புத்தூர், மேலமடம், நடுவக்குறிச்சி மற்றும் முப்புலிவெட்டி கிராம பொதுமக்கள் உடைப்பை சரி செய்ய ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா _ விடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில்.
இன்று ஓட்டப்பிடாரம் கிராம ஊராட்சி மன்றத்தலைவர் இளையராஜா தனது சொந்தச் செலவில் பொதுநலத்துடன் ரூ.1,00,000/- (ரூபாய் ஒரு லட்சம்) மதிப்பில் 2000-க்கு மேற்பட்ட மணல் மூட்டைகளை கொண்டு ராசங்குளம் கண்மாய் உடைப்பினை சீரமைப்பு செய்தார்.
கண்மாய் சீரமைப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜாவுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.